< Back
மாநில செய்திகள்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தினத்தந்தி
|
11 March 2023 7:00 PM GMT

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தமிழக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் விளக்கும் வகையிலான புகைப்பட கண்காட்சி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சிறுவாச்சூரில் நடத்தப்பட்டது. கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

மேலும் செய்திகள்