< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
|1 Oct 2023 12:15 AM IST
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது
சிவகங்கை ஒன்றியம், ஒக்கூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர்.