< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டையில் கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிலைய ஊழியர் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டையில் கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிலைய ஊழியர் சாவு

தினத்தந்தி
|
17 Jan 2023 2:38 PM IST

ஊத்துக்கோட்டை அருகே கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிலைய ஊழியர் பரிதாபமாக பலியானார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவர் பெட்ரோல் பங்கில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு நவீன் (10), துஷ்வந்த் (8) என 2 மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனலட்சுமி தன் கணவனை விட்டு பிரிந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் தனியாக வசித்து வரும் பிரகாஷ் காலை கடனை செலுத்த சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திருப்பவில்லை. இதனால் பிரகாசின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து போந்தவாக்கம் கிராம எல்லையில் உள்ள நாட்நாச்சியாச்சியார் கோவில் அருகே உள்ள கால்வாயில் பிரகாஷ் பிணமாக மிதப்பதைக் அந்த பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்