< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ராயபுரத்தில் சிறுவர்களுக்கு இடையே தகராறில் மின் இணைப்பு பெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு
|10 July 2023 2:02 PM IST
ராயபுரத்தில் சிறுவர்களுக்கு இடையே தகராறில் மின் இணைப்பு பெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைப்பெற்றது.
ராயபுரம் கிரேஸ் கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலில் சிறுவர்கள் 3 பேர் மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை சிறுவர்கள் மீது வீச முயன்ற நிலையில் தவறுதலாக அங்கு இருந்த மின் இணைப்பு பெட்டி மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.