< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு...!
மாநில செய்திகள்

ஈரோட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு...!

தினத்தந்தி
|
30 Jan 2023 8:24 PM IST

ஈரோடு, திருவாரூரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

இந்தநிலையில், ஈரோடு மற்றும் திருவாரூரில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்