< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்களை விற்றவர் கைது
|26 Oct 2023 1:12 AM IST
புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் நகர போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது கோவிந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 188 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.