< Back
மாநில செய்திகள்
பள்ளி எதிரே புகையிலை பொருள் விற்றவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி எதிரே புகையிலை பொருள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
17 Dec 2022 12:38 AM IST

பள்ளி எதிரே புகையிலை பொருள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே போதைப்பொருளான மாவா (குட்கா) விற்கப்படுவதாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் செந்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்துறை காலனி தெருவை சேர்ந்த குமரவேல் என்பவர் நடத்தி வரும் டீக்கடையுடன் கூடிய பெட்டிக்கடையில் மாவா விற்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து குமாரவேலை கைது செய்த போலீசார், அவரிடம் 7 பொட்டலங்களில் இருந்த மாவாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்