< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
|24 May 2023 11:37 AM IST
திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பம் கண்டிகை பகுதியில் சிலர் டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மணவூர் சாலையில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் 60 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர் குப்பம் கண்டிகையை சேர்ந்த பாலு (வயது 47) என்பது தெரிந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 60 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.