< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்தவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது

தினத்தந்தி
|
1 July 2023 2:32 AM IST

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு அகஸ்தியர்புரம் பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது வாகைகுளம் நடுத்தெருவை சேர்ந்த ராஜா (வயது 23) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராஜாவுடன் இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்