< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வெளிமாநில மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது
|20 July 2023 10:05 PM IST
பெரியகுளத்தில், வெளிமாநில மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில், அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வெளி மாநில மதுபாக்கெட்டுகள் வைத்திருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 52) என்று தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர்.