< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
48 மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
|3 Oct 2023 3:28 AM IST
48 மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள கவுசிகா நதி பாலத்தில் வடக்கு குப்பனாபுரத்தை சேர்ந்த பால் கண்ணன் (வயது 24) என்பவர் 48 மது பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.