< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த நபர்.. ஈரோடு இடைத்தேர்தலில் சுவாரசியம்
|5 Feb 2023 11:58 AM IST
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதவை கோலத்தில் வந்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன் என கூறினார்.
தனது சின்னமான மது பாட்டிலை தேர்தல் நாள் அன்று மதுக்கடைகளை மூடி மறைத்து விடுகின்றனர் என கூறிய அவர், தேர்தல் நாளில் மதுக்கடைகள் திறந்து இருந்தால் தான் வெற்றி பெறுவேன் என்று குறிப்பிட்டார்.