< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வடபழனியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
|21 Aug 2023 4:23 PM IST
வடபழனியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). நேற்று முன்தினம் இவரது அண்ணன் மகள் மஞ்சள் நீராட்டு விழா அதே பகுதி அழகர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நடந்தது. இதில் சுதாகர் கலந்து கொண்டார்.
அப்போது சுதாகர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக சுதாகர், திடீரென 3-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.