மதுரவாயல் பகுதியில் இறந்து போன நாய்க்கு 2ம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்...!
|மதுரவாயல் பகுதியில் இறந்து போன நாய்க்கு 2ம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரவாயல்,
தற்போதைய சூழலில் அனைவரின் வீடுகளிலும் செல்ல பிராணியாக நாய், பூனை, கிளி, புறா உள்ளிட்ட பலவற்றை வளர்த்து வருகின்றனர். அதில் குறிப்பாக அனைவரது வீட்டிலும் நாய்க்குட்டிகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.
அவ்வாறு வளர்க்கும் செல்ல பிராணிகளை பலர் தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்த்து வரும் நிலையில் சிலர் அதையும் தாண்டி தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு சீமந்தம், பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் செய்து வரும் நிலையில் மதுரவாயலில் இறந்து போன நாய்க்கு அதன் உரிமையாளர் ஒருவர் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அந்த போஸ்டரில் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி என்றும் நாய் இறந்து போன நாள் மற்றும் நாயின் பெயர் சீஜே என்றும் நினைவுகளுடன் அப்பா என அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்களது வீட்டில் நடக்கும் துக்க மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு பலர் போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் வீட்டில் செல்ல பிராணியாக வளர்த்த நாய் இறந்ததற்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி போஸ்டர் மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.