< Back
மாநில செய்திகள்

திருநெல்வேலி
மாநில செய்திகள்
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்

20 Jun 2023 12:11 AM IST
பணகுடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்.
பணகுடி:
பணகுடி போலீசார் தெற்கு வள்ளியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் ஜான் பாபு (வயது 29) என்பதும், இவர் பணகுடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து கைப்பைகள், செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.