< Back
மாநில செய்திகள்
நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு
மதுரை
மாநில செய்திகள்

நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
4 July 2023 2:30 AM IST

நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்


மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா 1-வது தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 20). சம்பவத்தன்று இவர் செல்போனில் பேசிக்கொண்டே திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும் என்று கூறி அவரிடம் செல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்