< Back
மாநில செய்திகள்
மின்கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மின்கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில்

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் மின்கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில் தீயணைப்புத்துறையினர் மீட்டு சிகிச்சை


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏராளமான மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் கிராமப்புறங்களில் உள்ள தோட்டங்கள், காடுகள், விளைநிலங்களில் நடமாடுகின்றன. இதுமட்டுமல்லாது ஒரு சில மயில்கள் நகரத்திலும் நடமாடுகின்றன. மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை அருகில் செட்டித்தெருவில் நேற்று மயில் ஒன்று மின் கம்பியில் அடிபட்ட நிலையில் கீழே விழுந்து உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் அந்த மயிலை மீட்டு, மயிலாடுதுறை அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதையடுத்து அந்த மயிலை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்