< Back
மாநில செய்திகள்
குளம் தூர்வாருவது தொடர்பாக சமாதான கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

குளம் தூர்வாருவது தொடர்பாக சமாதான கூட்டம்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:30 AM IST

வைத்தீஸ்வரன்கோவில் அருகே குளம் தூர்வாருவது தொடர்பாக சமாதான கூட்டம் நடந்தது.

சீர்காழி;

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட மருவத்தூர் கிராமத்தில் உள்ள தாமரைக்குளம் அரசு சார்பில் ரூ. 66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணி, சுற்றுச்சுவர், நடைபாதை, படித்துறை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமற்றதாக நடைபெறுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தனர். இதன் எதிரொலியாக நேற்று சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் இளங்கோவன் தலைமையில் நடந்தது. வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி, பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முறையாக அகற்றுவது, தாமரை குளத்தில் நடைபெற்று வரும் பணிகளை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், சப் இன்ஸ்பெக்டர், பேரூராட்சி பொறியாளர் ஆகியோர் 26-ந் தேதி கூட்டாய்வு மேற்கொள்வது, பணியை தரமாக செய்ய நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்