< Back
மாநில செய்திகள்
ரூ.1 கோடி தங்கத்தை கடத்தி வந்த பயணி
திருச்சி
மாநில செய்திகள்

ரூ.1 கோடி தங்கத்தை கடத்தி வந்த பயணி

தினத்தந்தி
|
18 Sept 2023 3:52 AM IST

ரூ.1 கோடி தங்கத்தை பயணி கடத்தி வந்தார்.

செம்பட்டு:

பயணிகளிடம் சோதனை

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது ஒரு பயணி தனது உள்ளாடையில் மறைத்து பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 920 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்