செங்கல்பட்டு
சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் பயணி திடீர் சாவு
|சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த ஒருவர் மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே வந்த போது நெஞ்சு வலிப்பதாக சக பயணிகளிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரை குடித்த அந்த நபர் சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையத்திற்கும் பரனூர் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மின்சார ரெயிலிலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலைய நடைமேடை 1-ல் அவரது உடல் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து 2 மணிநேரம் கழித்து வந்த ஆம்புலன்சில் அவரது உடலை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த நபர் கடலூர் மாவட்டம் குடிக்காடு சிப்காட் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 52) என்பதும் இவர் பால்சீலிங்க தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.