< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்; வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம் - அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும்; வேறு ஏதாவது அமைத்தால் எதிர்ப்போம் - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
30 Jan 2024 9:24 PM IST

கோயம்பேட்டில் பசுமை பூங்காவைத் தவிர வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளும், பல்வேறு நோய்களும் வருவதற்கு காரணம் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை செய்ய போதுமான இடம் இல்லாததே ஆகும். எனவே சென்னை கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட வேண்டும்.

அங்கு வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது. வணிக வளாகங்கள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. அவ்வாறு கோயம்பேட்டில் வேறு ஏதேனும் கட்டுமானங்கள் வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டம் நடத்துவோம்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்