< Back
மாநில செய்திகள்
ஒரு வயது பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்
வேலூர்
மாநில செய்திகள்

ஒரு வயது பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்

தினத்தந்தி
|
5 July 2023 12:19 AM IST

காட்பாடியில் ஒரு வயது பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காட்பாடி காந்திநகரை சேர்ந்த தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல்நலம் குணமடையவில்லை. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவில் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காந்திநகர் பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்