< Back
மாநில செய்திகள்
அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
மாநில செய்திகள்

அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

தினத்தந்தி
|
14 Nov 2022 4:25 PM IST

அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை, அம்பத்தூர் அருகே மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அம்பத்தூர் வேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், இவரது மனைவி கவுசல்யா. யுவராஜ் பிளம்மிங் வேலை செய்து வருகிறார். இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை மீனாட்சி. இந்த நிலையில் நேற்று கவுசல்யா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போது குழந்தை மீனாட்சி விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

அப்போது வீட்டில் கீழே வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் குழந்தையின் விளையாட்டுப் பொருள் தவறி விழுந்துள்ளது. விளையாட்டுப் பொருளை எடுப்பதற்காக சென்ற மீனாட்சி தலைகீழாக மீன் தொட்டிக்குள் விழுந்துள்ளாள். இதை கவனிக்காத கவுசல்யா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார்.

பத்து நிமிடம் கழித்து கவுசல்யா உள்ளே வந்து பார்த்த போது குழந்தை தலைகீழாக மீன்தொட்டியில் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த கவுசல்யா உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்