< Back
மாநில செய்திகள்
தனியார் மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
27 Oct 2023 9:18 PM IST

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இளம் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இளம் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்த சரிதா என்ற 19 வயது மாணவி, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர், மருத்துவமனையின் மொட்டை மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்