< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அரளி விதையை தின்று நர்சு தற்கொலை
|18 March 2023 11:47 PM IST
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அரளி விதையை தின்று நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி அருகே உள்ள கீராத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் ஜெயபாரதி (வயது 22). இவர் டிப்ளமா நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த ஜெயபாரதிக்கு அவரது தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் ஜெயபாரதிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயபாரதி அரளி விதையை (விஷம்) தின்றுவிட்டு மயங்கினார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாரதி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.