< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு அருகே 7-வது மாடியில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
மாநில செய்திகள்

கோயம்பேடு அருகே 7-வது மாடியில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி

தினத்தந்தி
|
21 Aug 2022 11:44 AM IST

கோயம்பேடு அருகே கட்டிட வேலை பார்க்கும் போது 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

போரூர்,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ராஜூ மன்டல்(வயது26) கட்டிட தொழிலாளி. இவர் விருகம்பாக்கம் மேற்கு நடேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வீட்டு வசதி வாரிய கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை 7வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ராஜூ திடீரென எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் ராஜூ மன்டல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்