< Back
மாநில செய்திகள்
ஒளிராத உயர் கோபுர மின்விளக்கு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஒளிராத உயர் கோபுர மின்விளக்கு

தினத்தந்தி
|
21 Sept 2023 2:02 AM IST

சேதுபாவாசத்திரம் அருகே ஒளிராத உயர் கோபுர மின்விளக்கை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ரெட்டவயல் கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இந்த உயர் கோபுர மின்விளக்கு ஒளிர்ந்து பயன் அளித்து வந்தது. தற்போது இந்த உயர்கோபுர மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளது. மேலும், அதில் இருந்த மின்விளக்குகள் சில காணாமல் போய் விட்டது. இதனால் அந்த கடைவீதி பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ரெட்டவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ரெட்டவயல் கடைவீதியில் உயர்கோபுர மின்விளக்கை சீரமைத்து மின்விளக்குகள் பொருத்தி ஒளிர செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்