< Back
மாநில செய்திகள்
காந்திகிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் உழவர் சந்தை
கரூர்
மாநில செய்திகள்

காந்திகிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் உழவர் சந்தை

தினத்தந்தி
|
31 July 2023 11:35 PM IST

காந்திகிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் உழவர் சந்தை பணிகளை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

திட்டப்பணிகள் ஆய்வு

கரூர் மாவட்டம், க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி வட்டாரங்களில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் மற்றும் இணை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

இதில் க.பரமத்தி வட்டாரத்தில் செயல்பட்டு வரும் கோடந்தூர் முருங்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு முருங்கை மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு மற்றும் முருங்கை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் இயற்கை முறையில் முருங்கை பயிர் செய்து வரும் விவசாயிகளின் வயல்களை பார்வையிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து அரவக்குறிச்சி வட்டாரத்தில் கட்டப்பட்டுள்ள முருங்கை பதப்படுத்தும் மையத்தை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் மற்றும் இணை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தாந்தோணிமலை

பின்னர் தாந்தோணிமலை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் கரூர் வேளாண் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை ஆய்வு செய்து வணிக செயல்பாடுகளை மேம்படுத்த அறிவுரை வழங்கினர். தொடர்ந்து காந்திகிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய உழவர் சந்தை செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

வேளாண் வணிகத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி முழுமையாக சாதனை அடைந்திடுமாறு வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் ரவிபாரதி, கரூர் வேளாண்மை அலுவலர்கள் அனிதா, வினோதா, துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்