< Back
மாநில செய்திகள்
தவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி
மாநில செய்திகள்

தவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி

தினத்தந்தி
|
7 Aug 2024 6:20 AM IST

சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை கண்டறிய புதிய வசதி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.

எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள புதிய வாட்ஸ்-அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்து பின் தொடரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





மேலும் செய்திகள்