< Back
மாநில செய்திகள்
புதிய வகை வைரசால் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மாநில செய்திகள்

புதிய வகை வைரசால் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தினத்தந்தி
|
15 Dec 2023 12:06 PM IST

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரிக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு 7, 8 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 40 என அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "புதிய வகை தொற்று 3,4 நாட்களில் சரியாகிவிடும் என்பதால் பதற்றமடையத் தேவையில்லை. புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில் 230 ஆக உயர்ந்துள்ளது. 1,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று 264 பேருக்கு பரிசோதனைகள் செய்ததில் 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரிக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்