< Back
மாநில செய்திகள்
ராஜபாளையத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

ராஜபாளையத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
12 Oct 2022 12:33 AM IST

ராஜபாளையத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக பஞ்சு மார்க்கெட் நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்றன. தற்போது சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால் புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர் நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து புதிதாக தார்ச்சாலை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்