< Back
மாநில செய்திகள்
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் கழிவறைகளை  தூய்மைப்படுத்த புதிய எந்திரம்
திருச்சி
மாநில செய்திகள்

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் கழிவறைகளை தூய்மைப்படுத்த புதிய எந்திரம்

தினத்தந்தி
|
2 July 2023 12:56 AM IST

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் கழிவறைகளை தூய்மைப்படுத்த புதிய எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

காட்டுப்புத்தூர்,

காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் தண்ணீர் அழுத்தம் மூலம் பொது கழிப்பிடங்களை தூய்மை செய்ய நவீன எந்திரத்தை முசிறி எம்.எல்.ஏ., திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந. தியாகராஜன் அறிமுகம்செய்து வைத்தார்.

இதில் துப்புரவு மேற்பார்வையாளர் (பொறுப்பு) கண்ணன், காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத்தலைவர் சுதாசிவ செல்வராஜ், தா.பேட்டை பேரூராட்சி தலைவர் தக்காளிதங்கராஜ், துணைத் தலைவர் மயில்வாகனம், தா.பேட்டை ஒன்றிய செயலாளர் பெரியசாமி, துறையூர் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் காட்டுப்புத்தூர் தி.மு.க. நகர செயலாளர் கே.டி.எஸ். செல்வராஜ், காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவ செல்வராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது வரவேற்றார். பின்னர் பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளர் நல்லமுத்து, பணி காலத்தில் இறந்த பஸ் நிலைய வசூல் பணியாளர் சேகர், தூய்மை பணியாளர் சிவா, ஆகியோருக்கு ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 808-ஐ எம்.எல்.ஏ. வழங்கினார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்