< Back
மாநில செய்திகள்
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்

தினத்தந்தி
|
9 Nov 2022 9:21 AM IST

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், வரும் 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்