< Back
மாநில செய்திகள்
உஷார் ...! உஷார்...! 16ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

bbc

மாநில செய்திகள்

உஷார் ...! உஷார்...! 16ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தினத்தந்தி
|
12 Nov 2022 11:02 AM IST

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், நாளை, நாளை மறுநாள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கே நகர்ந்து தமிழகத்தைக் கடந்து அரபிக் கடலை ஆடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், நாளை, நாளை மறுநாள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகு தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்