< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலம், ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை
மாநில செய்திகள்

"கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலம், ரெயில் நிலையம் அமைக்க வேண்டும்" - ஜி.கே.வாசன் கோரிக்கை

தினத்தந்தி
|
6 Aug 2022 7:21 PM IST

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வுகள் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரெயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வருவதற்கும், அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தைதான் பயன்படுத்த முடியும், இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.

எனவே புதிய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கத்தில், புதிய ரெயில் நிலையம் அமைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் இருக்கும். இல்லையென்றால், மாற்றாக அருகில் உள்ள வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலமும், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக புதிய ரெயில் நிலையமும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வுகள் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்