திருப்பத்தூர்
வாணியம்பாடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தேசிய தர சான்று மத்திய குழுவினர் ஆய்வு
|வாணியம்பாடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தேசிய தர சான்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தேசிய தர சான்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி நியூ டவுன் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தரச் சான்று பெற தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய தரச்சான்று ஆய்வுக் குழுவின் மதிப்பீட்டாளர்கள் டாக்டர் ஷிவ்தாஸ் (கேரளா), மற்றும் டாக்டர் சபீர் படேல் (கர்நாடகா) ஆகியோர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, நோயாளிகளிடம் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம், மருத்துவ கருவிகள், ஆய்வக பரிசோதனை கூடங்கள், தினமும் வரும் வெளி நோயாளிகள், கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் பிரசவ சிகிச்சைகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு குறித்து அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் மத்திய அரசின் சார்பில் தேசிய தரச் சான்று அளிக்கப்படும் என்று மருத்துவ குழுவினர் கூறினர்.
ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி மற்றும் மாவட்ட, வட்டார மருத்துவ அலுவலர்கள் பிற மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.