< Back
மாநில செய்திகள்
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு
மாநில செய்திகள்

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
20 July 2024 6:31 PM IST

அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு ஆணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் துறையின் மூலம் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வை கடந்த மாதம் 18ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு ஆணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 5 ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 2.3 செ.மீ. ஆகவும், அகலம் 1.2 செ.மீ ஆகவும் எடை 2 கிராம் ஆகவும் உள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்