< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடலில் திடீரென மிதந்து வந்த சீன நாட்டு மர்மபொருள்..! - மீனவர்கள் அதிர்ச்சி... நாகையில் பரபரப்பு...
|14 Feb 2023 5:11 PM IST
வெள்ளை வர்ணம் பூசிய உருளை வடிவிலான மர்ம பொருள் கரையொதுங்கி இருந்ததை நாகை மீனவர்கள் கண்டறிந்தனர்.
நாகை,
நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, வெள்ளை வர்ணம் பூசிய உருளை வடிவிலான மர்ம பொருள் கரையொதுங்கி இருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்புப்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சென்ற சுங்கத்துறை, க்யூ பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர் மர்மபொருளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அப்போது சீன எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சிலிண்டரில் கேஸ் நிரப்பப்பட்டது தெரியவந்தது.
3 அடி உயரம், 30 கிலோ எடை கொண்ட சீன கேஸ் சிலிண்டரை கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.