< Back
மாநில செய்திகள்
கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பலி

தினத்தந்தி
|
23 April 2023 12:15 AM IST

குளச்சலில் கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

குளச்சல்,

குளச்சலில் கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

பிளஸ்-1 மாணவர்கள்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன், மீனவர். இவரது மகன் நிகின் (வயது16). அதே பகுதியில் ஜாண்பால் தெருவை சேர்ந்த அருள்தாஸ் மகன் சிஜோ (16). இவர்கள் இருவரும் பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளனர். இவர்களும் முட்டத்தை சேர்ந்த புஷ்பராஜ் மகன் ரிஜோவும் (16) நண்பர்கள். ரிஜோ 9-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கடியபட்டணத்தில் இருந்து குளச்சல் வழியாக குறும்பனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நிகின் ஓட்டினார். பின்னால் சிஜோ, ரிஜோ ஆகியோர் அமர்ந்திருந்தனர். சைமன்காலனி ஏ.வி.எம். கால்வாய் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கால்வாயில் பாய்ந்தது.

பரிதாப சாவு

இதில் நிகின் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி ெகாண்டிருந்தனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிஜோ, ரிஜோ ஆகிய இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், நிகினின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்