< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
|12 Oct 2023 1:21 PM IST
திருத்தணியில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி நகராட்சி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 31). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபாகரன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.