< Back
மாநில செய்திகள்
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
7 Aug 2023 1:56 AM IST

குளச்சல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

குளச்சல்,

குளச்சல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வெளிநாட்டில் வேலை

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு காட்டுக்குளத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் ஆண்டன் நிஷாந்த் (வயது27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இந்தநிலையில் நேற்று மாலையில் ஆண்டன் நிஷாந்த் கருங்கல் - குளச்சல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குளச்சல் அருகே உள்ள களிமார் பாலம் பகுதியில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

பரிதாப சாவு

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்த வருகிறார்கள். மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்