< Back
மாநில செய்திகள்
மேடவாக்கம் மேம்பாலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மேடவாக்கம் மேம்பாலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
10 Sept 2023 3:29 PM IST

மேடவாக்கம் மேம்பாலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதியது

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 23). இவர், நேற்று முன்தினம் அதிகாலை அதே பகுதியை சேர்ந்த நண்பர் சங்கர் (21) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரஷீத் (29) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். மேடவாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து இருந்த சங்கர், ரஷீத் ஆகியோர் படுகாயங்களுடன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்