கள்ளக்குறிச்சி
துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
|மாடூர் ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் மனு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாடூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கொளஞ்சி, ரமேஷ், மணிமேகலை உள்பட 4 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் மனு கொடுத்தனர். அதில் மாடூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ள பிரியா அன்பழகன் தனது கணவர் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், வார்டு உறுப்பினர்களை தகாத வார்த்தையால் பேசி வருகிறார். இதனால் வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை. எனவே ஊராட்சியில் உள்ள 6 வார்டு உறுப்பினர்களில் 4 பேர் சேர்ந்து ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குனர் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.