< Back
மாநில செய்திகள்
உல்லாசமாக இருக்க தடை: 2-வது கணவனுடன் சேர்ந்து குழந்தையின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த தாய்...!
மாநில செய்திகள்

உல்லாசமாக இருக்க தடை: 2-வது கணவனுடன் சேர்ந்து குழந்தையின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த தாய்...!

தினத்தந்தி
|
1 Oct 2022 4:15 PM IST

மதுபோதையில் பெண் குழந்தைக்கு சிகரெட் மூலம் சூடு வைத்து கொடுமைப்படுத்திய குழந்தையின் தாய் மற்றும் அவரின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. இவரின் மகள் பானுவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே பானுவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திடீரென தன் தாய் கன்னியம்மாவுக்கு போன் செய்த பானு, குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

உடனே குழந்தையை பார்க்க கன்னியம்மா சென்றுள்ளார். அங்கு குழந்தையை பார்த்த போது முகத்தில் சிராய்ப்பு காயங்கள், உடலில் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே விரைந்த வந்த சாஸ்திரி நகர் போலீசார் குழந்தையின் பாட்டி கன்னியம்மா மற்றும் தாய் பானுவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உல்லாசமாக இருப்பதற்கு முதல் கணவரின் குழந்தை இடைஞ்சலாக இருந்ததாக கருதி, பானுவும் ஜெகனும் சேர்ந்து குழந்தைக்கு அடித்தும் சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை குழந்தை குறித்து இருவருக்குமிடையே தகராறு முற்றியதில், இருவரும் சேர்ந்து குழந்தையை ஆத்திரத்தில் பலமாக அடித்ததில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையை துன்புறுத்திய 2 பேரையும் போலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



மேலும் செய்திகள்