< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய குரங்கு - மீட்டு காப்பாற்றிய மக்கள் - நெகிழ்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
1 Oct 2022 7:24 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த குரங்குக்கு பொதுமக்கள் முதலுதவி செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த குரங்குக்கு பொதுமக்கள் முதலுதவி செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் கோயில் அருகே மின்சார வயரில் தொங்கி விளையாடியது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அதன் கை, கால் பகுதிகளில் தீப்புண் ஏற்பட்டது.

இதனால் படுகாயம் அடைந்த குரங்குக்கு பொதுமக்களே மருந்துகள் பூசினர். பின்னர், வனத்துறை அலுவலகத்திற்கு சென்று சிகிச்சை அளிக்க கோரி பொதுமக்கள் முறையிட்டனர். வன ஊழியர்கள் அக்குரங்கை பிடித்து சிகிக்சை அளித்து வருகின்றனர். குரங்குக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்