< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்
|9 Jun 2024 6:06 PM IST
ரவுடிகளை விடுவிக்கக் கோரி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை,
சென்னை போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சைக்கோ சரண், போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரவுடிகளையும் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.
அப்போது மருத்துவமனைக்கு வந்த ரவுடிகளின் ஆதரவாளர்கள், மருத்துவமனையை அடித்துநொறுக்கினர். இதில் மருத்துவ உபகரணங்கள், கண்ணாடிகள் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்புடன் காணபட்டது. சிறிது நேரத்தில் ரவுடிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கஞ்சா, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடிகள் மருத்துவமனையை அடித்து நெருக்கியது தெரிய வந்துள்ளது. ரவுடிகளை விடுவிக்கக் கோரி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.