< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பால் வேன் சாலையில் கவிழ்ந்தது
|11 July 2023 12:37 AM IST
பால் வேன் சாலையில் கவிழ்ந்தது
பெரம்பலூர் மாவட்டம் மங்கூனிலிருந்து உப்பிலியபுரம் அருகே உள்ள ஒக்கரையை நோக்கி பால்வேன் வந்து கொண்டிருந்தது. வேனை டிரைவர் விஜய் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். வேன் ஒக்கரை பிரிவு சாலை அருகே வளைவில் திரும்பும்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த பால் கேன்கள் கீழே விழுந்து அதில் உள்ள பால் கொட்டியது. இதில் சுமார் ஆயிரத்து 500 லிட்டர் பால் சேதமானது. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் விசாரரணை நடத்தி வருகின்றனர்.