< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
காப்பகத்தில் இருந்து மனநலம் பாதித்தவர் தப்பியோட்டம்
|17 Jan 2023 12:45 AM IST
காப்பகத்தில் இருந்து மனநலம் பாதித்தவர் தப்பியோடினார்.
அரியலூர் மாவட்டம் கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மூலம் சிகிச்சைக்காக விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞானசுந்தர் நேற்று முன்தினம் வேலா கருணை இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து விடுதி காப்பாளர் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.