< Back
மாநில செய்திகள்
கடலில் அமைப்பதற்கு பதிலாக மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம் - சீமான்
மாநில செய்திகள்

கடலில் அமைப்பதற்கு பதிலாக மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம் - சீமான்

தினத்தந்தி
|
5 Feb 2023 4:35 AM IST

கடலில் அமைப்பதற்கு பதிலாக மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்று சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமானின் உடன்பிறந்த சகோதரியான அன்பரசியின் மகள் கயல்விழிக்கு சிவகங்கையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் சீமான் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கடல் என்பது கட்சிக்கு சொந்தமானதல்ல. அது பொது சொத்து. பேனா சின்னம் குறித்த எனது கருத்துக்கு, பதில் கருத்தாக அமைச்சர் சேகர்பாபு உரிமையோடு என்னை திட்டுகிறார். அவர் பேசியது பழைய டயலாக். அவருக்கே, கடலில் பேனா சின்னம் அமைப்பது தவறான செயல் என தெரியும். கடலுக்குள் சின்னம் வேண்டாம் என்று நான், முதல்-அமைச்சரிடம் கேட்கிறேன், அப்படி கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்றால் அண்ணா அறிவாலயத்திலோ, அண்ணா நூலகத்திலோ அல்லது மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்திலோ அமைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்