< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த கட்டிட மேஸ்திரி பலி
வேலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த கட்டிட மேஸ்திரி பலி

தினத்தந்தி
|
11 Sept 2022 10:14 PM IST

குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தபோது விபத்தில் சிக்கிய கட்டிட மேஸ்திரி இறந்தார். விபத்தின்போது அவர் தாக்கப்பட்டதால் இறந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தபோது விபத்தில் சிக்கிய கட்டிட மேஸ்திரி இறந்தார். விபத்தின்போது அவர் தாக்கப்பட்டதால் இறந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கட்டிட மேஸ்திரி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்்த ஏகாம்பரம் மகன் சுதாகர் (வயது 26). கட்டிட மேஸ்திரி.

கடந்த கடந்த புதன்கிழமை காலை சுதாகர் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பெரும்பாடி அருகே உள்ள துரைப்பட்டி என்ற கிராம பகுதியில் வந்தபோது லட்சுமி (65) என்ற பெண் மீது மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் நிலையில் முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தாயார் புகார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதாகரின் தாயார் பொன்னியம்மாள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் தனது மகன் சுதாகர் மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் இறந்து விட்டார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி

இதனையடுத்து இறந்து போன சுதாகரின் உறவினர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து விபத்து நடந்த போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதால்தான் சுதாகர் இறந்தார். எனவே விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கிராம மக்களிடம் சுதாகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில்தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும. அதன்படி நீங்கள் கூறுவதுபோல் நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். அதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

இறந்துபோன சுதாகருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்